LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


பத்திரப்பதிவு சாட்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Posted in forum 'EyesTube'

EyesTube

EyesTube
User Support

சென்னை:சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்யும் போது, சாட்சியாக வருவோரின் புகைப்படம், கைரேகை பதிவு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்குவருகின்றன.

பத்திரப் பதிவின் போது, விற்பவர், வாங்குபவர் மற்றும் அவர்கள் தரப்பில், தலா ஒருவர் சாட்சியாக கையெழுத்திடவேண்டும்.சில சமயங்களில் விற்பவர் அல்லது வாங்குபவர் தரப்பில் யாரும் வராத நிலையில், ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவர். வீடு, மனை விற்பனை தரகர்களும் சாட்சியாககையெழுத்து போடுவர்.

சார் - பதிவாளர் அலுவலகங்களில், இது போன்று சாட்சி கையெழுத்து போடுவதற்காகவே, சிலர் வலம் வருகின்றனர்.ஒரே நபர் தொடர்ந்து பல பத்திரங்களில் சாட்சியாக வருவது வாடிக்கை யாகி விட்டது. இது, மோசடிக்கு வழி வகுப்பதாக பதிவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அதனால், பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய, புதிய கட்டுப்பாடுகளை, அரசுஅறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் விபரம்

*பத்திரங்களை பதிவு செய்யும் போது,சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கைரேகை யையும் பதிவு செய்ய வேண்டும். சாட்சியாக வருவோரின் அடையாள ஆவணத்தையும், தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

*ஒரே நபர், தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் கையெழுத்திட, சார் - பதிவாளர் அனுமதிக்கக் கூடாது.அவசியம் ஏற்பட்டால், மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின், சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.

இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
24/2/2020, 10:45 pmPost 1
You cannot reply to topics in this forum