ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘எந்திரன்' படத்தின் 2ம் பாகமாக உருவாகி வரும் ‘2.O'படத்தை 3D தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக ‘லைகா புரொடக்ஷன்' நிறுவனம் தயாரித்து வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் ஜனவரி 6-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.