LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


ஆர்.கே நகரில் பெற்ற வாக்குகளை ஊத்தாப்பம் சாப்பிட்டு கொண்டாடுங்கள் - பாஜகவை கலாய்த்த ஜிக்னேஷ் மேவானி

Posted in forum 'EyesTube'

ELY Niya

ELY Niya
New Member

அகமதாபாத்: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளை ஊத்தாப்பம் சாப்பிட்டு கொண்டாடுமாறு பாஜகவை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார் குஜராத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. நடந்து முடிந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தமிழக அளவில் மட்டுமின்றி நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் பாஜக வாங்கிய ஓட்டுகள் தான்.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், சுயேச்சை வேட்பாளர் தினகரன் ஆகியோர் களத்தில் இருந்த நேரத்தில் இந்த தேர்தல் ஐந்து முனை தேர்தல் என்று ஊடகங்களில் பேசப்பட்டது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தினகரனுக்கு அடுத்த இடத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த பட்டியலில் நோட்டாவுக்கு அடுத்த இடத்தையே தேசிய கட்சியான பாஜக பெற்று உள்ளது. வெறும் 1417 வாக்குகள் பெற்று உள்ள நிலையில், பாஜகவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக வாங்கிய உள்ள ஓட்டுகள் குறித்து ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் நடந்த குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி. சம கால அரசியலில் தலித் மக்களுக்கும் அதிகாரம் வேண்டும் என்கிற கோஷத்தை முன் வைத்து பாஜகவை எதிர்க்கும் ஜிக்னேஷ் மேவானி, இந்திய அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

Jignesh Mevani
World's biggest missed call party - who received more than 50 lakhs missed call in TN but received only 1417 votes which is less than 2373 Nota votes, Hope they can digest Uttapam with TN toppings

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்தான பதிவில், உலகிலேயே பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பாஜக, தமிழகத்தில் 50 லட்சம் மிஸ்டு கால் அழைப்புகள் பெற்றதாக தெரிவித்து இருந்தது. ஆனால், அவர்கள் வாங்கி இருக்கும் ஓட்டுகளோ வெறும் 1417 தான். இந்த வெற்றியை பாஜகவினர் தமிழகத்தில் ஊத்தாப்பம் சாப்பிட்டு கொண்டாடி கொள்ளுங்கள் என்று தெரிவித்து உள்ளார். பலரும் இந்த ட்விட்டை பகிர்ந்து வருகின்றனர்.
26/12/2017, 6:45 amPost 1
You cannot reply to topics in this forum