LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


12 ராசிக்காரர்களும் ஏன் கோபப்படுவாங்க தெரியுமா?

Posted in forum 'EyesTube'

Report Nine

Report Nine
User Support

சென்னை: ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒரு குணம் உண்டு. நெருப்பு, நிலம், காற்று, நீர் என நான்கு வகையாக 12 ராசிகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ராசிகளின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கு கோபம், டென்சன், மன அழுத்தம் வரும். ஒருவரது ராசியைக் கொண்டே, அவர்கள் எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா?. 'கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்பார்கள். எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும் ஏதாவது காரணத்திற்காக டென்சன் அடைவார்கள்.

எந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் கோபம் கொள்வார்கள் என்று தெரிந்து கொண்டு அவர்களை எப்படி கூல் செய்து காரியம் சாதிப்பது என்று அறிந்து கொள்வோம்.

மேஷ ராசிக்காரர்கள் நெருப்பு ராசியின் அம்சத்தை கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வேலையை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதிக மன அழுத்தம் ஏற்படும். அதே அழுத்தத்தோடுதான் தங்களுக்கு கொடுக்கப்படும் இலக்குகளை அடைய போராடுவார்கள். தனக்கென ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொண்டு செயல்படுவார்கள். அந்த இலக்கை அடைய முடியாவிட்டால், மன அழுத்தத்தை அளவுக்கு அதிகமாக உணர்வார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு உள்ள அகங்கார குணமும் சுயேச்சான சுபாவமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்து விடும். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள். சட்டென்று கோபம் வரும் என்பதால் பாராட்டி பேசி இவர்களின் அன்பை சம்பாதிக்கலாம். வாதம் செய்தால் இவர்களை ஜெயிக்க முடியாது.

ரிஷப ராசிக்காரர்கள், நில ராசிக்காரர்கள். பொறுமைசாலிகள். தாம் செய்யும் விஷயம் எங்கு பாழாகிவிடுமோ என்ற ஒருவித அச்ச உணர்வுடனேயே இருப்பர். இந்த உணர்வே பெரும்பாலும் இவர்கள் மனதை அதிகமாக கஷ்டப்படுத்தும். ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணமுள்ளவர்கள். எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். இவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது, மற்றவர்களது கருத்துக்களை தவிர்த்து, தங்களது கருத்துக்களைத் தான் திணிக்க நினைப்பார்கள். இவர்கள் தங்கள் கோபத்தைக் குறைக்க நேரம் எடுத்துக் கொண்டால், சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அன்பாக பேசி காரியம் சாதிக்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள் காற்று ராசியில் பிறந்தவர்கள். சிறு விஷயங்களுக்கு எல்லாம் எளிதில் மனம் உடைந்துவிடுவார்கள். எனவே இந்த ராசிக்கார்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், மனவலிமை அதிகரிக்கும். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே மிதுன ராசிக்காரர்களின் இயல்புகள் புரியும். மிதுன ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக் கொள்ளமுடியுமோ அவ்வளவு எளிதில் தொடர்பை துண்டிக்கவும் தயங்கமாட்டார்கள். இவர்களிடம் அளவாக பேச வேண்டும்.

கடகம் ராசிக்காரர்கள் ஜலாராசிகள் என்பதால் கற்பனை திறன் அதிகமிருக்கும். நல்ல ஞாபக சக்தியும் உண்டு. கடக ராசிக்காரர்கள், எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வை உணர்வார்கள். இரவில் தனியாக சாலையில் நடந்து சென்றாலும், மிகுந்த பதற்றத்துடன் இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்கள் தங்களை விமர்சிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இரக்க குணமும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவார்கள். இவர்களிடம் பழகுவது கடினம் என்றாலும் பழகியபின் பிரிய முடியாது. தன்னை நம்பியவர்களுக்கு எல்லாவித உதவியும் செய்வார்கள். இதனால் அடிக்கடி ஏமாந்து போவதும் உண்டு. பிடிவாத குணம் கொண்டவர்கள். பிறர் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்காமல் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் பலரின் வெறுப்பிற்கு ஆளாகி விடுவார்கள். பாசமாக பேசி காரியம் சாதிக்க வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்கள், நெருப்பு ராசிக்காரர்கள். தங்கள் விருப்பத்திற்கு எதிராக எது நடந்தாலும், மிகுந்த கோபம் மற்றும் பதற்றமடைவார்கள். வீரமும், தைரியமும் நிறைந்தவர்கள். இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் கோபமாக இருக்கும் போது மட்டும் அவர்களை சீண்டி பார்த்துவிடாதீர்கள். அவர்கள் எவ்வளவு அன்பானவர்களாகவும், கருணை உள்ளம் உடையவர்களாகவும் தெரிந்தாலும், கோபம் என்று வந்துவிட்டால் போதும் யாரென்று பார்க்க மாட்டார்கள். இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் பழி வாங்க வேண்டும் என்றால் சிறிதும் யோசிக்காமல் செய்துவிடுவார்கள். முன்கோபப்பட்டாலும் தான் செய்தது தவறு என தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர் செய்யும் பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய விஷயங்களை பெரிதாக்கி விடுவார்கள்.

கன்னி ராசிக்காரர்களின் பலவீனமே அளவுக்கு அதிகமாக சிந்திப்பது. நில ராசிக்காரர்கள் என்பதால் அதிகமாக சிந்திக்கும் போது, சிறு பிரச்சனை வந்தாலும், மனதை பெரிதாக பாதிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர இவர்களுக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி பிறரை வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள்.சூழ்நிலைக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்டவராதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எனினும் இவர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள் காற்று ராசிக்காரர்கள். அதிகமாக சிந்தித்து, அதனாலேயே அதிக மன அழுத்தத்திற்குள்ளாவார்கள். ஒரு செயலால் விளையும் நன்மையை விட, தீமைகளைப் பற்றி அதிகமாக ஆராய்வதே இவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப் போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறயதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போலத்தான் மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப்பார்கள்

விருச்சிக ராசிக்காரர்கள், நீர் ராசிக்காரர்கள். தங்களுக்கு போதிய சுதந்திரம் கிடைக்காத போது மிகுந்த கோபம் கொள்வார்கள். இத்தகையவர்கள் தங்களுக்கு தனிச் சுதந்திரம் வேண்டும் எனவும், மற்றவர்கள் இவர்களது உணர்வை மதிக்காமல் இருந்தால், அவர்களை இந்த ராசிக்காரர்கள் வெறுப்பதோடு, அதனால் மிகுந்த டென்சன் மற்றும் பதற்றமடைவார்கள். முன்கோபமும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பதால் இவர்களிடத்திலிருந்து ஒரு அடி விலகியே இருப்பது நல்லது. முன் பின் யோசிக்காமல் தூக்கி எறிந்து பேசி விடுவார்கள். இவர்கள் பேசுவது கஷ்டமாக இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை மறுக்க முடியாது. கோபத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களைச் சீண்டுவது ஒரு மிகப் பெரிய தவறாகும். அவர்கள் மிகப்பெரிய தைரியசாலிகள். அவர்களை யாராவது அவமானப்படுத்தினால் பயப்படாமல் அதற்கு பதிலாக அவர்கள் மேல் இருக்கும் கோபத்தை அதிகப்படுத்திக் கொள்வர். அவர்கள் கோபப்படுவது தவறாக இருந்தாலும் கூட மற்றவரை அழிக்கத் தான் நினைப்பர்.

தனுசு ராசிக்காரர்களுக்கு மற்றவர்கள் அறிவுரை கூறுவது பிடிக்காது. நெருப்பின் அம்சத்தில் பிறந்த இவர்கள் மிகவும் ஓய்வற்றவர்களாக இருப்பதாலேயே, அதிக மனக் கவலையால் கஷ்டப்படுவார்கள்.தனுசு ராசிக்காரர்களைக் கோபப்படுத்திவிட்டால் அவர்களால் அவர்களது நாக்கினை அடக்க முடியாது. அவர்களது கோபத்தால் பிறரை தாக்க அவர்களது நாக்கே போதும். பேசியே ஒருவரை காயப்படுத்துவதில் இவர்கள் வல்லவர்கள். சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள். இவர்களுக்கு பொய் பேசுபவர்களையும், தீய பழக்க வழக்கம் உள்ளவர்களையும் கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு கோபம் வந்தால் எதிரில் யாருமே நிற்க முடியாது. ஆனால், கோபம் போன அடுத்த நொடியே மன்னிப்பு கேட்பதிலும் இவர்களை மிஞ்ச முடியாது. கோபத்தில் இந்த ராசிக்காரர்கள் பழிவாங்க முடிவெடுத்துவிட்டால், அது முடியும் வரை ஓயமாட்டார்கள். இவர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவிக்க சற்றும் பயப்படமாட்டார்கள். இவர்கள் ஒரு நல்ல கூட்டாளியாகவும், மிகவும் விசுவாசமானவர்களாகவும் கருதப்படுவார்கள்.

மகர ராசிக்கார்கள், நிலத்தைப் போல பொறுமைசாலிகள். தனக்குத் தானே அதிக அழுத்தத்தைக் கொடுத்துக் கொள்வார்கள். இந்த ராசிக்காரர்களின் மன அழுத்தத்திற்கு முழு காரணம் அவர்களே தான். இவர்கள் தங்களது இலக்குகளை அடையாத போது, மிகுந்த எரிச்சலுக்குள்ளாவார்கள். இவர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும். மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

கும்ப ராசிக்காரர்கள் எதையும் தங்களுக்கு விருப்பமான வழியில் செய்யவே விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள், அனைத்து விஷயமும் தங்களது விருப்பத்தின் படியே நடக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கைவிட்டால், எந்த பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. தனக்கு பிடித்தவர்களிடம் நெருங்கி பழகும் இவர்கள் பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் துட்சமாக நினைத்து அவற்றை தூக்கி எறிவார்கள். உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்ட இவர்களின் பேச்சிற்கு எந்த இடத்திலும் மதிப்பிருக்கும் தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிப்பார்கள்.

மீன ராசிக்காரர்கள் நீர் ராசியில் பிறந்தவர்கள். ஒரு விஷயத்தை அளவுக்கு அதிகமாக வெளிக்காட்டும் போது, மனக்கவலை அடைவார்கள். பொது பேச்சுக்கள் பதற்றத்தை உண்டாக்கும். பெரிய மக்கள் கூட்டத்தைக் கண்டால், கோபம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். மீன ராசிக்காரர்கள் தமக்கு தாமே தீமை செய்து கொள்வதில் வல்லவர்கள். வீண் விவாகரங்களில்அடிக்கடி தலையிட்டு வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இந்த ராசிக்கார்கள், தங்களது அந்தரங்க விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை வெறுப்பார்கள். ஆழ்கடல் போல அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள், அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி. சினம் கொண்டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள்ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும். தமிழ் வருடங்கள் அறுபதையும படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சனைக்கு தீர்வுகாண தரிசிக்க வேண்டிய தலம் இது. அதே போல நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புங்கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது இங்கும் சென்று வரலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளம் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம் இங்கு சென்று தரிசித்தால் கோபம் விலகி முகத்தில் புன்னகை மலரும்.
14/12/2017, 6:30 pmPost 1
You cannot reply to topics in this forum